Saturday, June 13, 2015

ஆகாசத்த நான் பாக்குறேன்


பாடல் : ஆகாசத்த நான் பாக்குறேன்
படம் : குக்கூ
வரிகள் : யுகபாரதி
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : பிரதிப் , கல்யாணி 
#########HHHHHHHHHHHH#############
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையோ காணாத இமை தான்
கண்ணீர பார்த்தேனே
இனி என்னோட அழகா பொன்னான உலக
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

ஊரு கண்ணே படும் படி
உறவாடும் கனவே தொடருதே
நெனவாகும் கனவே அருகிலே
உன்ன தூக்கி சுமப்பேன் கருவிலே
மடி வாசம் போதும் ஒறங்கவே
நீ தானே சாகா வரங்களே
தமிழே தமிழே வருவேனே ஒங்கரமாய்
கோடியே கோடியே அழுரேனே ஆனந்தமாய்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

காம்ப தேடும் குழந்தையாய்
உன்ன தேடும் உசுரு பசியில
கோடி பேரில் உன்ன மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல ஏதும் இல்ல
நீ போதும் நானும் ஏழை இல்ல
அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்
அழகி அழகி இது போதும் வாழ்நாளில்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

பச்சை வண்ண பூவே

பாடல் : பச்சி வண்ண பூவே
படம் : வை ராஜா வை
இசை : யுவன்சங்கர் ராஜா
வரிகள்:  மதன் கார்கி
பாடியவர் : யுவன்சங்கர் ராஜா
############HHHHHHHH##############

பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
ஹே புல்லின் மேலே பாடம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்...

என் கால் ஒன்றில் முள் குத்தினால்
அவள் முள்ளிற்கு நோய் பார்க்கிறாள்
வாய் கொண்டு பேசாத காய் தங்கும் மரம் ஒன்றாய்
காயென்று சொன்னாலே என்னை ஈர்க்கிறாள்
நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன்
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஹே... நானும் மரமாக என் வரம் கேட்டேன்
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஹே... நானும் மரமாக என் வரம் கேட்டேன்

என் வீடெங்கும் காடாக்கினாய் 
என் காட்டுக்குள் கிளி ஆகினாய்
கிளியொன்றில் கீச்சாகி இலை ஒன்றில் மூச்சாகி
முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய்
ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய்
நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய்
என் வேறெங்கும் தாராளமாய்
மழை நனைத்த பின்னே நான் சிலிர்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்
மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குளே ஏதோ நான் துளிர்கின்றேன்
நான் துளிர்கின்றேன்....

பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
ஹே புல்லின் மேல பாத‌ம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்டபின்னே

பச்சை வண்ண பூவே ஹே
பச்சை வண்ண பூவே...ஓ...ஓ...ஓ....

Thursday, June 11, 2015

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி

பாடல் : என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
படம் : அப்புச்சிகிராமம்
வரிகள் : சாருகேஷ் சேகர்
இசை : சி.விஷால் 
பாடியவர் : வருண் விஷ்வா

##############HHHHHHHHHHH###############

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ....(2)

யேன்காதுல எசை போல
பேசுர உன்கொரலாலே
எசை போல நீயும் பேசவே
எப்போவுமே ரசிக்கிறேன் நானே
ஏதோ ஏதோ பாடுறேன் நானே

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

குத்தாலத்து சாரலபோல் நல்ல‌சிரிக்க என் தேன்மொழி
கன்னங்குழி போதானு என்ன மயக்கும் உன் மைவிழி
கருவாபையன் கனவெல்லாம் கலர்படம் ஆனதனால
முழிச்சாலும் மெதுக்கானே காதலெனும் பல்லாக்குமேல
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழுபவுர்ணமி
சொக்கனுக்கே ஆசைவரும் என்ன அழகு யென் கண்மணி
தைமாசம் தேதி குறிக்கவா மேளதாளம் கேள்வி கேக்குது
உன்னெஞ்சில‌ ஊஞ்சலாடவே  மஞ்சகயிரு ஏங்கிவாடுது
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

Tuesday, June 9, 2015

உன் பார்வை போதும்

பாடல் : அன்பே அன்பே 
படம் : டார்லிங்
வரிகள் : நா.முத்துக்குமார்
இசை : ஜீவி.பிரகாஷ்
பாடியவர் : ஜீவி.பிரகாஷ்

#########HHHHHHHHHHHH###########


அன்பே அன்பே...
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல்கள் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

Sunday, June 7, 2015

கோடையில மழ போல

பாடல் : கோடையிலே மழபோல‌
படம் : குக்கூ
வரிகள் : யுகபாரதி
இசை : சந்தோஷ் நாராயணன்

##########HHHHHHHHHHHH############

கோடையில மழ போல என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக வருவேன் உன் கூட...

காலை இளங்கதிராக கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ…?
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ…?


காரியம் நூறு செய்து
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை
உந்தன் காலடி தடமறிந்து
செல்லும் பாதைகள் முடிவதில்லை

ஆலயம் தேடி சென்று
செய்யும் பூசைகள் தேவை இல்லை
உன்னதன் கைவிரல் தொடும் பொழுது
துன்பம் தொலைவிலும் வருவதில்லை

உறவெது வடிவெதுவோ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

மாறிடும் யாவும் இன்று
சொல்லும் வார்த்தையில் நெசமும் இல்லை
உண்மை காதலை பொருத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை

ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகில்லை
வெந்து போகிற வேலையிலும்
அன்னும் தீ என்றும் அணைவதில்லை

உறவெது வடிவெதுவோ ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

கோடையில மழ போல என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக வருவேன் உன் கூட...

போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ…?

ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்...


பாடல் :  ஏன் இங்கு வந்தான்
படம் :  மீகாமன்
இசை :  தமன்
பாடல் வரிகள் : மதன் கார்க்கி
பாடகர்: எ. வி. பூஜா

###########HHHHHHHHHHH##############

ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்
செல் என்று சொனேன் என்னுள்ளே சென்றான்

உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்
எழுப்பி விடுகின்றான்
சிறிது சிறிதாய் கிரகங்கள் எல்லாம்
கிளப்பி விடுகின்றான்
பூவும் பிறக்கும் நொடியின் முன்னே
தேனை எடுக்கின்றாய் ஊ ஊ ஹோ
காதல் பிறக்கும் நொடியின் முன்னே
காமம் கொடுக்கின்றான்

ஏன் இங்கு வந்தான் ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான் பேசாதே என்றான்
செல் என்று சொனனேன் செல் என்று சொனனேன்
என்னுள்ளே சென்றான் என்னுள்ளே சென்றான்

என் அழகை ரசிக்கிறான்
என் இளமை ருசிக்கிறான்
என் இடையின் சரிவிலே மழை துளியென உருள்கின்றான்
என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான்
என் கோபத்தில் மெதுவாய் சுவைதான்
என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி
கன்னத்தில் பூசுகின்றான்

விடிய விடிய இரவினை வடிதேன்
குடிக்க செய்தானே
கொடிய கொடிய வழிகளை கூட
வெடிக்க செய்தானே

ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்
செல் என்று சொனனேன் என்னுள்ளே சென்றான்

நான் ஒளியில் நடக்கிறேன்
என் நிழலை தொடர்கிறான்
என் விளக்கை அணைக்கிறேன்
என் இருலெனா படர்கின்றான்
முன் அனுமதி இன்றி நுழைந்தான்
என் அறையினில் எங்கும் நிறைந்தான்
இது முறை இல்லை என்றேன்
வரை அரை இன்றி எனை அவன் சிறை பிடித்தான்

சிறையினுள்ளே சிறகுகள் தந்து
பறக்க செய்தானே
கனவும் நெனவும் தொடும் ஒரு எடத்தில்
இருக்க செய்தானே

ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்
செல் என்று சொனேன் என்னுள்ளே சென்றான்

Tuesday, June 2, 2015

உனக்கென்ன வேணும் சொல்லு...


பாடல் : உனக்கென்ன வேணும் சொல்லு
படம்  : என்னை அறிந்தால்
வரிகள் : தாமரை
இசை :  ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : பென்னி தயாள் , மகதி

#############HHHHHHHHHHHHHHH############

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காண சொல்லியதே
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே....

பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று

தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே
இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல...