Wednesday, March 24, 2010

இது வரை இல்லாத உணர்விது....

பெண் : இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை
தேடிடும் பாடல் கேட்டாயோ

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை
தேடிடும் பாடல் கேட்டாயோ

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே .....

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே .....

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும்
நாள் செல்லுதே....

இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொள்ளாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வரவேண்டும்
நீண்ட வழி என் பயணம் ohho

ஆண்: அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்

என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்

பெண்: இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மனநிலை தான் Ohhh ohh

ஆண்: மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

தேகம் இப்போது உணர்ந்தது...
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே....

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)


Tuesday, March 23, 2010

துளி துளி துளி மழையாய் வந்தாளே...

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....

செல் செல் அவளுடன் செல் என்றே
கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

அழகாய் மனதை பறித்து விட்டாளே..
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை
கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்,
பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது
கொலுசாய் மாறதோன்றும்...

அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,

நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...

அழகாய் மனதை பறித்து விட்டாளே...

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே....

சிறகுகள் வந்தது

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!

உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!

கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!

ஓ..
நதியே நீ எங்கே என்று
கரைகள் தேடக் கூடாதா!
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேடக் கூடாதா!

ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் நொடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் யார் அறிவார்

அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே
பூவின் உள்ளே நிலவின் கீழே
தீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே
உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில்

உள்ள வழியே..

எனக்கே நான் சுமையாய் மாறி
என்னைச் சுமந்து வந்தேனே!
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னைத் தேடி வந்தேனே!

விழி நனைத்திடும் நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும் உன்னை எந்தன்
உயிர் ஒதுக்கி விடாது

உலகம் ஒரு புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
ஒரு இமையெங்கிலும் தேனில் மூழ்க
ஒரு இமை மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும் காணுமோ!

உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!

ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே

ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஹோ ஹோசானா ஹோசானா
ஹோ ஹோ ஹொசானா ஹொசானா ஹோ

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தல் ஆகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே

ஹோசானா என் வாசல் தாண்டி போனாளே
ஹோசானா வேறு ஒன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூறு ஆகிறேன்
அவள் போன பின்பு எந்தன்
நெஞ்சை தேடி போகிறேன்
ஹோசானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா சாவுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா ஏன் என்றால் காதல் என்பேன்
ஹோசானா

everybody wanna know what we like-a feel like-a
I really wanna be here with you
It's not enough to say that we're made for each other
It's love that is hosaana true
hosaana, be there when you callin out my(me) name
hosaana, feeling like my(me) whole life has changed
I never wanna be the same
It's time we rearrange
I take a step, you take a step
I'm here callin out to you

ஹேல்லோ ஹெல்லோ ஹெல்லோ
யோ யோ ஹோசானா ஹோசானா
ஹோ ஹோசானா ஹோ
ஹா மீ & யூ ஓஹோ

வண்ண வண்ண பட்டுப்பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அழைக்கின்றதே
ஹ சொட்டு சொட்டாய் தொட்டு போக
மேகம் ஒன்று மேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோசானா பட்டுப்பூச்சி வந்தாச்சா
ஹோசானா மேகம் உன்னை தொட்டாச்சா
கிழிஞ்சல்கள் ஆகிறேன்
நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி
கையில் வைத்து பற்றி கொள்கிறேன்
ஹேல்லோ ஹெல்லோ ஹெல்லோ ஓஹோ
ஹோசானா என் மீது அன்பு கொள்ள
ஹோசானா என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசானா உம் என்று சொல்லு போதும்
ஹோசானா

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

என் காதல் சொல்ல நேரம் இல்லை

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

(என் காதல் ..)

காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்

(என் காதல் ..)

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தா

கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே

பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஒன்று குடை ஆனதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்தாய்
மறந்தது என்ன கதை

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா

அழகான பூக்கள் பூக்கும்
தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத
ஆல மரத்திருட்டில்
இருள் கூட அறியாத
இன்பங்களின் முகத்தில்
இரு பேரும் கைதானோம்
முத்தங்களின் திருட்டில்
வருடித் தந்தாய் மனதை
திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும்
பூத்த கதை ஆளாலன் காட்டுக்குள்
ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே
உன்னை போர்த்திக் கொண்டு படுத்தேன்
பால் ஆற்றில் நீட் ஆடும்
போது துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா

மான் ஆடும் மலை
பக்கம் ஏரிக்கரை அருகில்
மயில் ஆடும் ஜன்னல்
கொண்ட மாளிகையில் அறையில்
கண்ணாடி பார்த்துக்கொண்டே
கலை யாவும் பயின்றோம்
கரு நீல போர்வைக்குள்ளே
இரு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு
சம்மதம் கேளாமல்
என்னை சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டென்று சட்டென்றூ முத்தம் தந்தாய்
மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுக்கொண்டு
புல் இல்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

ஏ துஷ்யந்தா..ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..ஏ துஷ்யந்தா..

உன் மேல ஆசதான்

உன் மேல ஆசதான்
ஆனது ஆகட்டும் Say it to me baby
போனது போகட்டும் Do it to me baby

இது கனவு தேசம்தான்
நினைத்ததை முடிப்பவன் One more time yeah
கிடைத்ததை எடுப்பவன் Do it to me baby
காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே


(உன் மேல..)

என் எதிர ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
தினுசான கேள்விதாம்ப்பா
துடிப்பான காலணிப்பா
கடல் ஏறும் கப்பலப்பா
கர தட்டி நிக்குதப்பா
பெண் தொட்டா மலையும் சாயும்
நடு சாமம் நிலவும் காயும்
நேசம் நாணம் தேகம் பேய் குளித்து
தூசி போலே தொலைவீர்கள்

மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாரடா
என் ஆச ரோசா
பட்டுக்கிட்டு ஒட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா
நான் தானே ராசா
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ
ஈசன் ஆளும் சாம்பல் மேல் புரண்டு
ஈசன் போலே அலைவீர்கள்

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே
Oh Boy Boy Boy

கதைகளை பேசும் விழி அருகே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் :கதைகளை பேசும் விழி அருகே

படம்: அங்காடித் தெரு

இசை:GV பிரகாஷ், விஜய் அந்தோணி

பாடியவர்கள்: பென்னி தயால், ஹம்ஷிகா

வரிகள்: நா. முத்துக்குமார்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

(கதைகளை..)

ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

(கதைகளை..)

கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா
கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை
ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை
வெறும் கரையில் படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி

(கதைகளை..)

உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே
ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்
ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்
நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்
இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

(கதைகளை..)