Sunday, January 17, 2010

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

படம் : அலை
பாடல் : என் ரகசிய கனவுகள்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்தினி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவனா?
மழை போலே வருவானா?
மடி மேலே விழுவானா?
மலர் போலே தொடுவானா? தொடுவானா?
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவனா?

ஒரு முறை பார்க்கையில் பனியென உருகினேன்
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்

கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்

காதல் நீரிலே மூழ்கி போகிறேன்
கையை நீட்ட வா கரையில் சேர்க்க வா…
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?—

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவளா?
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா? செய்பவனா? செய்பவனா?—

தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா?
தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா?

வெட்கத்தை வீசியே வா என சொல்கிறாய்
பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன்
இருந்தும் வெளியே பொய்யாய் முறைதேன்

கன்ன குழிகள் தான் காதல் தேசமா?
ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா?
இவள் தானா? இவள் தானா?
இவளோடு இணைவேனா?—

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?

என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவளா?
மழை போலே வருவாளா?
மடி மேலே விழுவாளா?

மலர் போலே தொடுவானா? தொடுவானா?
இவன் தானா?இவள் தானா?

இவனோடு இணைவேனா?இவன் தானா?
இவள் தானா?
இவனோடு இணைவேனா?


உன்னை காதலி என்று

உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே
என் காதல் நெடுஞ்சாலை
உன் மூச்சுக்காற்றெல்லாம்
அதில் தென்றல் தொழிசாலை
இதுவரைச் சொன்னது கவிதையல்ல
இதற்கு மேல் சொல்ல நான் கவிஞன் அல்ல
(உன்னை காதலி..)

அன்பே உந்தன் பார்வை ஏதோ சொல்ல
கட்டி அணைத்தால் என்ன
எந்தன் பிரிவுக்கு பதில் சொல்ல
பெண்ணே நீயும் ஒரு கனவல்ல
ஒரு போராட்டம் தான்
எந்தன் நெஞ்சுக்குள்ளே
நானும் சொல்ல
அண்ணாந்து பார்க்கும் போது
ஆகாயம் நீல நிறம்
மண் மீது பார்க்கும் போது
என் வாசல் கோலம் நீதான்
விரல் நகத்தை கண்டால் கூட
முன் நின்று ரசிப்பேனே
உந்தன் நெஞ்சை கண்டால்
சொர்க்கம் என்றே போவேன் நானே

(உன்னை..)

சில்லென்று நீர்ப்போல நானிருந்தேன்
என்னை நீ தொட்டதால்
எந்தன் வெள்ளை தேகம் வெண்ணீராச்சு
கண்ணாடி சிற்பம் போல
உன்னைக் கண்டேனே
இவள் முன்னாடி நான் நின்று
என்னை நானே காதல் கொண்டேன்
தீமூட்டும் ஆசையாலே
தினந்தோறும் நின்றுபோனேன்
தாய் வீட்டை நான் மறந்து
உன்னோடு ஓடிவந்தேன்
ஆகாயம் பூமியெல்லாம்
ஆண்டாண்டு காலமடி
ஆனாலும் என் காதல்
அதைத்தாண்டி வாழுமடி

(உன்னை..)

கரிகாலன் காலைப் போல

கரிகாலன் காலைப்போலக் கருத்திருக்குது குழலு
குழலில்ல குழலில்ல தாஜ்மஹால் நிழலு
சேவலோடக் கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடில்ல உதடில்ல மந்திரிச்சத் தகடு
ஏய் பருத்திப் பூவப்போல பதியுது ஒம்பாதம்
பாதமில்ல பாதமில்ல பச்சரிசி சாதம்
ஏ வலம்புரி சங்கப்போல வழுக்குது உன்கழுத்து
கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து
(கரிகாலன்..)

மேம்பால வளைவுப்போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்தரி முந்தரிக்கேக்கு
ஊதிவச்ச பலூன் போலப் பூத்திருக்கு கன்னம்
கன்னம் இல்ல கன்னம் இல்ல வெள்ளி வெள்ளிக் கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீப்புடிச்ச மேகம்
மாராப்புப் பந்தலிலே மறைச்சு வச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை

(கரிகாலன்..)

கண்டவுடன் வெட்டுதடி கத்திரிக்கோலுக் கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கெரங்கடிக்கிற ஜின்னு
பத்த வச்ச மத்தாப்புப் போல மினு மினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைரக்கல்லு
கண்ணுப்படப் போகுதுன்னு கன்னத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்

(கரிகாலன்..)