Wednesday, November 5, 2008

தோழியா என்

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவைதையே
வண்ணங்களை தந்து விட்டு
என் அருகில் வந்து நில்லு
(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவை போல மாட்டிக் கொண்டேன்
இறுதி சடன்கில் மிதிகள் படும்
பூவை போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூகிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்
(தோழியா..)


அவ என்ன என்ன தேடி

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

(அவ என்ன )

ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

(ஒண்ணுக்குள்ள ஒண்ணா)

தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே

Friday, July 11, 2008

கண்கள் இரண்டால்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத, பகலும் அல்லாத,
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத, படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா?

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை!

(கண்கள்...)

கரைகள் அண்டாத, காற்றும் தீண்டாத,
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்?
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

(கண்கள்...)

Saturday, May 31, 2008

அடடா அடடா

அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
(அடடா..)

நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்தபோது
எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி
(அடடா..)

ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் ஏங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக அர்த்தங்கள்
(அடடா..)

தேன் தேன் தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..

என்னவோ சொல்ல தொடந்தேன்
ஏதேதோ செய்ய தொடந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அழைந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

வல்லவரும் கையை ரசித்தேன்
ஆழவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
கொத்த வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் உள்ளம் ரசித்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

சேலையில் நிலாவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்
திருடனே உன்னை அறிந்தேன்
திருடிய என்னை அறிந்தேன்
என் உன்னை திருட தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
உன் தென்றல் உன்னால் அறிந்தேன்
அதில் தோசம் பின்பாய் அறிந்தேன்
நீ நடமாடும் ராட்சை தோட்டம் எதிரில் அறிந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

ஏய்..
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..

அலையே அலையே

அலையே அலையே அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல் சொன்னது யார்
பிறந்தேன் பிறந்தேன் இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய் மண்ணில் நானில்லை
ஒரு துளியானேன் உன்னாலே
இன்று கடலானேன் பெண்ணாலே
என் உயிரெல்லாம் தேனாக
ஒரு வார்த்தை சொன்னாலே
(அலையே.. அலையே.. )

மொட்டுக்குள்ளே வாசம் போலே
கட்டுப்பட்டு நின்றாயே
முட்டிச்செல்லும் காற்றாய் வந்து
தொட்டு திறந்து கொண்டேனே
உனது ஊடல் தீராமல்
எனது கடலில் மீன் இல்லை
கருணை பார்வை நீ பார்த்தாய்
கரையில் கூட மீன் தொல்லை
முகத்திரையை கழட்டிக்கொண்டாய்
சிறகுகளை அணிந்து கொண்டேன்
அலையாடிய அலையாடிய கரையில்
விளையாடிய விளையாடிய பறவை
மடியேறுது மடியேறுது பார் வெளியே
(அலையே.. அலையே.. )

பெண்ணே நான் ஓர் வார்த்தையில்லை
உந்தன் இதழில் தித்திக்க
கண்ணே நான் ஓர் தூக்கமில்லை
உந்தன் கண்ணில் ஒட்டிக்க
எனது ஜீவன் தீர்ந்தாலும்
எனது வாழ்வு உன்னோடு
கிளைகள் வெளியில் போனாலும்
வேரின் வாழ்வு மண்ணோடு
நீர் விழுந்தால் மண் மடியில்
நான் விழுந்தால் உன் மடியில்
நீர் விழுந்தால் மண் மடியில்
நான் விழுந்தால் உன் மடியில்
கடலோ இடம் மாறிய பொழுதும்
நிலமோ நிலம் தடுமாறிய பொழுதும்
பிரியாதிரு பிரியாதிரு புன்னகையே..

உயிரிலே என்

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?
(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
(உயிரிலே..)

கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்
எதிரே எதிரே..

பெ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: மோதும் மோதும்
கொலுசொலி ஏங்கும் ஏங்கும்
மனசொலியை பேசுதே...

பெ: போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரையே கூசுதே...

ஆ: பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி
பெ: பேசாது போனாலும் நீ என் சங்கதி

ஆ: கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை
அவளை அவளை அவளை அவளை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஆ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி...

ஆ: ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமையிது கொடுமையடி

பெ: நீங்காமல் நாம் சேர நீளமாகும் இப்புவி
ஆ: தூங்காமல் கைசேர காதல் தங்குமே

பெ: ரெட்டைகிளி அச்சத்திலே
நெஞ்சுக்குழி வெப்பத்திலே
சுட்டித்தனம் வெட்கத்திலே
அடடா அடடா அடடா அடடா

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
பெ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்

பெ: எட்டித் தொட நிற்கும் அவன்
எதிரே எதிரே..

ஆ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட

பெ: போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

Tuesday, April 22, 2008

எங்கேயோ பார்த்த

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்...
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ... ஏதானதோ...
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த...

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...


Tuesday, April 15, 2008

மனசுக்குள் மனசுக்குள்

மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால்
அழகானேன் புதிதாய் பிறந்தேன்
(மனசுக்குள்..)

இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்
வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில்
உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்
(மனசுக்குள்..)

இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்
பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்
நீ அருகினில் இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்
தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்
உன்னிடம் நான் பேபி என்பேன்
(மனசுக்குள்..)

Saturday, February 23, 2008

வெண்மேகம் பெண்ணாக

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ
உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன ?
உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ
உன்னாலே பல நியாபகம் என் முன்னே வந்தாடுதே

மஜ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண்கலங்க நிக்க வைக்கும் தீ நீ
பெண்ணே ஏனடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகயில் பெண்ணினமே கோபபட்டதேனடி
தேவதை வாழ்வது வீடிலை கோவில்
கடவுளின் கால்தடம் பார்க்கிரேன்
ஒன்ற இரண்டா உளரலை பாட
கண்முடி ஒரு ஓரம் நான் சய்கிரேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிரேன்

உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே

எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லகினில் தூக்கிசெல்ல
கட்டளைகள் விதிதாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க உயிருடன் வாழ்கிரேன் நானடி
என் காதல் என்னாகுமோ உன் பாததில் மண்ணாகுமோ

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ

Monday, January 21, 2008

எந்தன் வானமும்

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே

நீ நடக்கும் போது உன் நிழலும்
மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன்
உன் காதலின் ஆளம் கண்டு கண்கள் கலங்குதே
உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால்
உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்
என் பெயரைதான் யாரும் கேட்டல்
உன்பெர் சொல்கிரேன்
ஒரே ஒரு உடலில் இருஇதயம்
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்
நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

Wednesday, January 9, 2008

சரியா இது தவறா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா


ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மரைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்துகிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னல் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைக்குமே
நெஞ்சுக்குள் துண்டில் விட்டு இழுக்குமே
நம் நிழல் அதன் வளி நடக்குமே
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி கண்கள் ஓடும்
அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையை
தாண்டி உள்ளம் கேட்க்கும் இது சரியா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா

ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெளுகினிலே அதை படைத்துவிட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தெடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது மயில்கள் ரெண்து
தொட தொட வந்தால் தொடுவானம் போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று இது சரியா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா காதல் தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா இது தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

சரியா இது தவறா சரியா இது தவறா
சரியா இது தவறா இந்த
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல
சரியா காதல் தவறா சரியா இது தவறா
வரமா இது வலயா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலயா,,,,,,,,,,,

Saturday, January 5, 2008

ஒற்றைக்கண்ணால

ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி
ஒறங்கவில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி
ஒறங்கவில்ல என் மனசு
புரியலையே புரியலையே
நீ யாருன்னு புரியலயே
தெரியலையே தெரியலையே
இது காதல் தான்னு தெரியலயே
புரியாத பொண்ணப் பாத்தா
புதுசாத் தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹே ஹே ஹே

(ஒற்றைக் கண்ணாலே)



சாலையோரப் பூக்கள் எல்லாம்
உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி
உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெருங்கும் போது
அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன் கால்தடங்கள்
மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கைநகங்கள்
விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணைப் பாத்தால்
தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே

(ஒற்றைக் கண்ணாலே)

கோடைக்காலச் சாரல் ஒன்று
என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத் தொட்ட
பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம்
எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை
என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள்
நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள்
நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணைப் பார்த்தால்
அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே

(ஒற்றைக் கண்ணாலே)

எங்கே உன் பூமுகம்

எங்கே உன் பூமுகம் எங்கே உன் நியாபகம்
கண்ணே உன் தரிசனம்
எந்தனாளிலும் எதிரி போலாகும்

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில்
நீ என் உயிரை திருடினாய்

கண் காது நாசியாவிலும்
கலகங்கள் நிறைய செய்கிராய்
என் ஜாணில் புகுந்து
கொண்டு நீ இரங்காமல்
உரைய வைக்கிராய்
ஏனென்னை சீரழித்தாய்..................

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே

கருப்பான விடியல் கிடையாது
சிவப்பான நதிகள் கிடையாது
திதைத்தாலும் தேங்கிபோகும் நிமிசம் கிடையாது
செதுக்காமல் சிலைகள் கிடையாது
எடுக்காமல் புதயல் கிடையாது
அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது
உப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது
பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது
பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது
வண்டின்றி புஸ்பத்தில் தேன் சொட்டாது
இனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே

உதட்டோர சுழியில் தொலைந்தேனா
உருத்தாதா அழகில் தொலைந்தேனா
இமைத்தாயே கூச்சத்தோடு
அதிலே தொலைந்தேனா
இனிப்பான பகையில் தொலைந்தேனா
இயல்பான வகையில் தொலைதேனா
தொலைந்தாயே நீ என்னோடு
அதனால் தொலைந்தேனா
வண்ணங்கள் வண்ணங்கள்
இல்லாமல் வாழ்ந்தேனே
தந்தாயே நிரமெல்லாம் அதானால்தானா
கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக
கண்டேனே நான் உன்னை அதனால்தானா
எதனாலே காதல் பிச்சை கேட்க்கும் பக்தன் நானா

காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வயில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருடினாய்

கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிராய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இரங்காமல்
உரைய வைக்கிராய்
ஏனென்னை சீரழித்தாய்..................


நீ என் தோழியா

நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்

நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
என் உயிரை எத்தனை முறை
வென்றாலும் எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள்
ஆனால் என்னை உடனே
உன் தான் உயிரில் காதலியாய்
மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா

கையும் காலும் ஓடாது
கண் இமையும் ஆடாது
கண்ணி நெஞ்சம் தூங்காது
பஞ்சு மெத்தை கேட்காது
பையா பையா காதல் நீதான்
சொல்லாமல் இதயத்தை எடுத்து நீட்டு நீ
சொல்லுற எந்தன் காட்டுல
இதழ்களை கொஞ்சம் காட்டு நீ
எழுதுகிறேன் காதல் உயிலை நானே
கத்தி இன்றி ரத்தம் இன்றி பிச்சி தர்ரேன் இதயத்த
காதலன் காதலி வரிசையில் சேர்ந்திட்டோம் நாமதான்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா

சொன்ன பேச்சை கேட்காது
அப்பா மூஞ்ச பார்க்காது
அம்மா கூட பேசாது
நேரம் காலம் தெரியாது
பொண்ணுக்குத்தான் காதல் மட்டும் வந்தாலே
உன்னை விட மோசம் நானடி
ஊரு பேரு மறந்து போச்சுடி
மூளை கூட கயந்து போச்சுடி
எனக்குள்ளே நீ வந்ததாலே விடு விடு
காதலிக்க மூளையெல்லாம் எதுக்குடா
போடி உன்னை காதலிக்க
மூளை ஒன்னும் வேண்டாமடி
எனக்கு இது வேணும்டா
இன்னமும் வேணும்டா தேவுடா
(நீ என் தோழியா..)

உன்னருகில் வருகையில்

உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
உன் பெயரைக் கேட்கையில் உற்சாகம் துளிர் விடுதே
உன் நிழலை தேடியே என் நிழலும் தொடருது இன்று
எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன்
என் நெஞ்சைக் கேட்கிறேன் பதி சொல்லிடவில்லை

உன் கண்கள் மீது ஒரு பூட்டு
வைத்துப் பூட்டும்போதும்
உன் இதயம் தாண்டி
வெளியே வருமே பெண்ணே
நீ பயணம் போகும் பாதை
வேண்டாமென்று சொல்லும்போதும்
உன் கால்கள் வருமே
வருவதை தடுத்திட முடியாது

என்னுடல் என் மனம் என் குணம் எல்லாம்
இன்று புதிதாக உருமாறும்
நண்பர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம்
காதில் நுழையாமல் வெளியேறும்
இது அன்பால் விரைகிற அவஸ்தைகளா
இல்லை உன் மேல் வருகிற ஆசைகளா
இதுவரை சேர்த்த இன்பம் துன்பங்களை
உன்னுடன் பகிர்ந்திட துடிக்கிறேன்
இது என்ன இது என்ன புது மயக்கம்
இரவோடும் பகலோடும் என்னை எரிக்க

கனவினில் தினம் தினம் பூத்திடும் பூக்களை
கைகளில் பறித்திட ஒளிந்திடுமா
எதிரினில் பேசிட தயங்கிடும் வார்த்தைகள்
சொன்னால் அது புரிந்திடுமா
கடவுளின் இருப்பிடம் காதலின் ரகசியம்
இரண்டையும் அறிந்திட முடிந்திடுமா
இடம் பொருள் ஏவலும் இதயத்தின் காவலும்
இன்றே மெல்ல மீறிடுமா
உன் கண்கள் பார்க்கும் திசையோடு
காரணமின்றி தெரிகின்றேன்
உந்தன் பார்வை எந்தன் மீது விழ
ஏனோ நானும் காத்திருப்பேன்
வெளியே சொன்ன ரகசியமாய்
என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே
சொல்லாமல் நான் மறைத்தாலும்
என் கண்ணின் மணிகள் என்னைக் காட்டி விடும்

எப்ப நீ என்னை

எப்ப நீ என்னைப் பாப்ப
எப்ப என் பேச்சைக் கேப்ப
எப்ப நான் பேச கெட்ட பையா

எப்போடா கோபம் கொறையும்
எப்படா பாசம் தெரியும்
எப்ப நான் பேச கெட்ட பையா

(எப்ப நீ என்னைப்)

நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாடுறேன்

ஒரு செல்லா நாயாய் உந்தன்
முன்னே வாலாட்டுறேன்
உன் செயலை எல்லாம் தூரம்
நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும்
திரும்பிப் பார்ப்பாயா

கண்ணைக் கட்டிக்கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயமில்லை நீ வா

மலையை சுமக்கிற பலமுனக்கு
மலரை ரசிக்கிற மனமுனக்கு
இனிமேல் போதும் நீ எனக்கு நீ வா

உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா
உன் கோபம் கூட நியாயமென்று ரசித்தேனடா

நீ தீயாயிரு எனைத் திரியாய்த் தொடு
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா

அட என்னைத் தவிர எல்லாப்
பேரும் ஆணாய் ஆனாலும்
நான் உனக்கு மட்டும் சொந்தம்
என்றேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்று சொல்லி விடேண்டா

எரிமலை கண்கள் ரெண்டு
பனிமலை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா
பூமியில் ஆம்பளை என்று உன்னை
தான் சொல்வேன் என்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா

உன்னாலே அச்சமின்றி நான் வாழவே
உன்கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்

இந்தப் பூமிப்பந்தை தாண்டிப்போக முடியாதுடா
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதடா
என் நிலவரம் உனக்குப் புரியவில்லையா