Wednesday, June 6, 2007

நன்றி சொல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும்
காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்
நெடுங்காலம் நான்
புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்


செவ்விளநி நான் குடிக்க
சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல
எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய
கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிர்தான்
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான்
எனக்கு வேற வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட
பிறகு ஏம்மாகலங்குரா ?

வங்கக் கடல் ஆழமென்ன
வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும்
கண்டதில்லையே!?
என்னுடைய நாயகனே
ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு
அந்த வானம் எல்லையே!
எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென
ராம்ன் கொண்ட சீதையேன
மடி சேர்ந்த பூரதமே
மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட
பிறகு ஏம்மாகலங்குரா ?
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தால நீ கிடைச்சே
திருக்கோவில் வீடுயென்று
வெளக்கேத்த நீயும்வந்த
நேரில் வந்த ஆண்டவனே,..

0 comments: