Thursday, May 17, 2007

இஞ்சி இடுப்பழகா

பெ: இஞ்சி இடுப்பழகா..... மஞ்ச செவப்பழகா....
கள்ளச் சிரிப்பழகா....
(வெறும் காத்து தாங்க வருது)
ஆ: ம்..... மறக்க மனம் கூடுதில்லையே
பெ: மறந்திடுவேனிகலே...
ஆ: இஞ்சி இடுப்பழகி..... மஞ்ச செவப்பழகி....
கள்ளச் சிரிப்பழகி.... மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா.... (இஞ்சி
பெ: தன்னந்தனித்திருக்க தத்தளிச்சி நான் இருக்க....
ஒன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையை
ஆ: புன்ன வனத்தினிலே பேடக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்....
பெ: உன் கழுத்தில் மாலையிட
ஒன்னிரண்டு தோளை தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
ஆ: வண்ணக் கிளி கையத் தொட சின்னச் சின்ன கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே....
உள்ளம் மட்டும் உன் வழியே நானே.... (இஞ்சி
பெ: அடிக்கிற காத்த கேளு அசையிற நாத்த கேளு
நடக்கிற ஆத்த கேளு நீ தானா.... (இஞ்சி

0 comments: